ஐ.தே.க செயலாளராக நவீன் திசாநாயக்க?

ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு பெருந்தோட்டக் கைத்தொ ழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிடம் ஐ.தே.க பின்வரிசை எம்.பிகள் கோரியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி புனரமைப்பு செயற்பாடுகளுக்காக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அரசியல் சபை உறுப் பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்கே கூடுதல் வாக்குகள் கிடைத்திருந்தன. இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்ற அமைச்சர் நவீன் திசாநாயக்கவே கட்சி செயலாளர் பதவிக்கு தகுதியானவர் என பின்வரிசை எம்.பிகளில் அநேகர் கருதுவதாக காவிந்த ஜெயவர்தன எம்.பி கூறினார். கட்சி செயலாளர் பதவிக்கு அமைச்சர் அல்லாத அரசியல்வாதி ஒருவரை நியமிக்க ஐ.தே.க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் நவீன் திசாநாயக்க கட்சி செயலாளராக நியமிக்கப்படுவாரானால் அவருக்கு அமைச்சு பதவியில் இருந்து விலக நேரிடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்வரும் 30 ஆம்திகதிக்கு முன்னர் கட்சி முக்கிய பதவிகளில் மாற்றம் செய்ய ஐ.தே.க முடிவு செய்துள்ளது. தலைவர் பதவி தவிர்ந்த முக்கிய பதவிகள் இதன் போது மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.