பால் மா விலை உயர்வு!

பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு  நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் ஒரு மெட்றிக் தொன் பால் மாவின் விலை 3,250 முதல் 3,350 அமெரிக்க டொலர்களாக உள்ள போதும் இதன்விலை எதிர்வரும் காலத்தில் 3,400 முதல் 3,500 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர்  கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அதன்படி 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும்,  ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.