Header Ads

Header ADS

வியாழன், 24 மே, 2018

கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை!

பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வித் திணைக்களத்தில் இது தொடர்பான அங்குரார்பண நிகழ்வு  இன்று (24) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வைத்தியர்களின் அறிவுரைகளுக்கு அமைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு உடலுக்கு மிகவும் எளிமையான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில் அணியும் சந்தர்ப்பம் இந்த புதிய திட்டத்தினால் வழங்கப்படுகிறது. 

இலங்கையில் 236,000 ஆசிரியர்கள் கடமையாற்றுவதாகவும் அதில் 172,000 பேர் ஆசிரியைகள் எனவும் இவர்களில் சுமார் 10,000 பேர் வருடம் ஒன்றிற்கு கர்ப்பம் தரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதன்படி, பாடசாலைகளில் கடமையாற்றும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு இன்று முதல் இந்த எளிமையான ஆடையை அணிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.