நான்கு மாடிகளை கொண்ட நவீன சந்தைக் கட்டடதொகுதி!

அக்குறணையில் 4 மாடிகள் கொண்ட நவீன சந்தைக் கட்டடத் தொகுதியை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த கட்டத்தை அமைப்பதற்கு இடையூறாக இருக்கின்ற நிறுவனங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பழைய கட்டிடத்தை உடைத்துவிட்டு வேலைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நேற்று நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோரின் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்த கட்டடம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ளது.


தற்போது இயங்கிவரும் பழைய சந்தை கட்டிடத்தை உடைப்பதற்கு அங்கு இயங்கிவரும் அரச வங்கியொன்று காலஅவகாசம் கோரியிருந்தது. இதனால் புதிய கட்டிடத்தை அமைப்பதில் இழுபறி நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து, பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலான பேச்சுவார்த்தை நேற்று அக்குறணையில் நடைபெற்றது.



நிலக்கீழ் வாகன தரிப்பிடத்துடன் கூடிய 4 மாடிகள் கொண்ட தள மற்றும் முதலாம் மாடிகளில் தலா 18 வீதம் 36 கடைகளும் ஒரு தகவல் பிரிவும், அனைத்து வங்கிகளுக்குமான ஏ.ரி.எம். இயந்திரங்களும் மூன்றாம் மாடியில் அக்குரணை பிரதேச சபைக்கான உப அலுவலகம் மற்றும் காரியாலயங்களும் நான்காம் மாடியில் ஒரு சிறிய கேட்போர் கூடம் மற்றும் உடற்பயிற்சி நிலையம் அடங்கலாக அனைத்து மாடிகளிலும் கழிவறை வசதிகளும் புதிய சந்தை கட்டடத் தொகுதியில் அமைக்கப்படவுள்ளன.



இந்த கலந்துரையாடலில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், அக்குறணை பிரதேச செயலாளர், பொதுச்சந்தை திட்ட பொறியியலாளர், அக்குறணை பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், பொதுச்சந்தையில் இயங்கும் வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.