கண்டி - குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை!

கண்டி மாவட்டத்தில் குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை விரிவுபடுத்தும் நோக்கில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகளுடன் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடினார்.

கெட்டம்பே அலுவலகத்தில் நேற்று இடம்பபெற்ற இந்த கலந்துரையாடல் கண்டி மாவட்டத்திலுள்ள குண்டசாலை, ஹாரகம, மரஸன்ன, கலகெதர, பூஜாப்பிட்டிய, அக்குறணை, பொல்கொல்ல, யடிநுவர பன்வில, உடுநுவர, தெல்தோட்டை, கினிகத்தென்ன போன்ற பிரதேசங்களுக்கு சீராக குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோங்கஹகே, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், பிரதித் தலைவர் எம்.எச்.எம். சல்மான், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, கண்டி மாவட்ட பொது முகாமையாளர் மீகொட, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.