சர்வதேச சந்தை மாற்றத்திற்கமைய உள்ளுர் சந்தையை வகுக்க வேண்டும்!

சர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்வதற்கு தனியார் துறைக்கு தேவையான வழிகாட்டல்களை அரசாங்கம் வழங்கவுள்ளது.சர்வதேச சந்தை
மாற்றமடைந்து வருகிறது. இது நாட்டிற்கு பெரும் சவாலாகும். இதற்கு பொருத்தமான வகையில் உள்ளுர் சந்தையை வகுக்க வேண்டுமென தேவையான தந்திரோபாய வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக என்று வெளிநாட்டு வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
காலி துறைமுகத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதி முதல் 28ம் திகதி வரை நடைபெறும் இலங்கை படகுகள் கண்காட்சி மற்றும் களியாட்டங்கள் தொடர்பான அறிமுக நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையிலேயே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
ஆகக்கூடிய வருமான வழிகளான படகுகள் தயாரிப்புத் துறையில் தொழில் வாய்ப்புக்களை பெரும் எண்ணிக்கையில் ஏற்படுத்த முடியும். உள்நாட்டு வெளிநாட்டுக் கோரிக்கைகளும் அதிகரிக்கும். தொழில்துறையை மேம்படுத்துவதற்கு பல ஆலோசனைகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையும் வெளிநாட்டு வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.