இந்துகள் இல்லாத இடத்திலா?காதா் மஸ்த்தானுக்கு இந்து சமய விவகாசர பிரதி அமைச்சா??

நாட்டின் இந்துக் கலாசார அமைச்சின் பிரததி அமைச்சராக காதர் மஸ்தான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதற்கு சிவசேதனை அமைப்பு கடும் கண்டணம் வெளியிட்டுள்ளது.


இந்துக் கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயைக் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட, இந்துக் கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள் என்றும் அவ்வமைப்பின் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் நடப்பது நல் ஆட்சி? இந்துக்களின் கொல் ஆட்சியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஒரு சில அமைச்சுப் பொறுப்புகளை பகிர்ந்தளித்திருந்தார்.

இதன்படி காதர் மஸ்தானை இந்து கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக நியமித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் சிவசேனை அமைப்பின் தலைவர் நேற்று செவ்வாக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்படி கண்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

இசுலாமியரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம்.

மாண்புமிகு துணை அமைச்சர் நீறணிந்து சந்தனமிட்டுச் சிவராத்திரி விழாவுக்கு வருராவாரா?

ஏனைய சமயத்தவர்களைக் காபீர்கள் (நீசர்கள்) எனக் கற்றவர், உருவ வழிபாட்டையே ஒத்துக்கொள்ளதவர், இந்துக்களை இசுலாமுக்கு மத மாற்றுவதையே இலக்காகக் கொண்ட குழு சார்ந்தவர், இந்துக்கள் வழிபடும் மாடுகளைக் கொன்று உண்பவர்,

இந்து ஒருவர் தன் சட்டைப் பைக்குள்ளேயேனும் இந்துக் கடவுளரின் படத்தை வைத்திருத்தலைக் கொடும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் சவூதி அரேபிய நாட்டிற்குப் புனித வழிபாட்டுப் பயணம் மேற்கொள்பவர், மட்டக்களப்புக் கல்லடியில் அம்பாறைக் கல்முனைக்குடியில் இந்துக் கோயில்களின்

மேல் இசுலாமியப் பள்ளிவாயில்களைக் கட்டியெழுப்பியதை எப்பொழுதும் கண்டிக்காதவர், அத்தகையவர் இந்துக் கலாசார அமைச்சின் மாண்புமிகு துணை அமைச்சர்.

இந்துக் கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயைக் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட, மாட்சிமை தங்கிய குடியரசுத் தலைவரே, இந்துக் கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள். நல் ஆட்சி அரசா? இந்துக்களின் கொல் ஆட்சி அரசா இந்த அரசு? என்றுள்ளது.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.