அரியாலையை பிறப்பிடமாகவும் நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் சுந்தரலிங்கம் அவர்கள் 15-12-2017 அன்று இறைபதமெய்தினார். அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி சதாசிவம் - தங்கச்சியம்மா தம்பதியினரின் புதல்வரும், திரு திருமதி மூத்ததம்பி - பாக்கியம் தம்பதியினரின் அருமை மருமகனும், திருமதி சற்குணதேவியின் அன்புக் கணவரும், சிந்துஜா (ஜெர்மனி), பிருந்தா (பிரான்ஸ்), தனுஷன் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், திலீபன் (ஜெர்மனி), சதீஷ் (பிரான்ஸ்), கிஷோகா (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜனார்தன், ஜதுஷன் ஜனுஷ் (ஜெர்மனி), பிருத்திக், கீர்த்திக், ஷர்மிதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனுமாவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.. |
கருத்துகள் இல்லை