வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன்!

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான்.கேணல் ரூபன். லெப்.கேணல்.சிரித்திரன்.
காலத்தை கணித்து காரியமாற்றும் தலைவன்-நீலத்தை அள்ளித் தெளித்தான் புலிக்கு வானில் பறவென…! அவன் தாளத்தில் ஆடினார் பலவேளை-வானத்தில் மேடையமைத்து…! இவர் வீரத்தை பாடிட வார்த்தைகள் ஏது…?தமிழன் மானம் காக்க வானமேறியவர்…! ஈழவானம் கறுப்புசட்டை அணிந்து கொண்டது…! காற்று சோகத்தில் கீதம் இசைத்து நின்றது…! ஈழத்தின் திசைகளில் சாவு ஓலங்களிற்குள்ளும் இவர்களிற்காய் -சோக கீதங்கள் இசைத்தன பல்லாயிரம் மனங்கள்….! பெருநிலம்.. சிறு நிலமாகி… மாற்றத்திற்காய் தமிழ்மண் தவித்திருந்த ஓர் பொழுதில்… ஈரத்தரை ஒன்றில்… தமிழரின் விழி ஈரத்தை துடைத்துவிட-எங்கள் வீரர்கள் ஏறினார் வானில்…! ஆரத்தழுவி வாழ்த்துச் சொல்லி அண்ணன் அனுப்பிவிட-தோழர் தோழைத்தடவி… வருகிறோம் என்று முகம் மலர கூறிச்சென்றார்…! எவரால் முடியும்….? எங்கள் கரியபுலிகள்போல் கையசைத்து சாவையணைத்துச் செல்வதற்கு…! பலமுறை பறந்து தளம் மீண்டவர்களல்லவா…! அந்த பெருமிதத்தில்… பார்த்துக்கொண்டிருந்த பாட்டியொருவர்…. “வற்றாப்பளைத் தாயே… பிள்ளைகள் வெற்றியோடு திரும்பவேனும்…” “கூனல் நிமிர்த்தி” அப்பாட்டி கும்பிட்ட காட்சியை-இப்போது நினைக்கையிலும் விழிகள் ஆனந்த தூறல் தூவி நிற்கிறது…! தமிழனிற்கு மானம் பெரிது அதன் பின்னர்தான் மற்றெல்லாமென்று-வானம் ஏறினார் வான்புலிகள் பலதடவை -ஆனாலும் மீண்டேதான் வந்தார்…! சாவுறுதியென்று அறிந்தபின்பும் வெடிப்பொறிகள் பல இருந்தும் வெடிக்காது போய்விட்டால்-வெடிக்க வைக்வென்று தன்னுடன் கைக்குண்டு எடுத்துச்சென்ற சிரித்திரன்… பகைவனின் வெடிபட்டு இறக்காவிடின் -அவர்கள் குடிகெட்டு போயிருக்கும்..! மரண பயத்தில்-பகைவன் வெளிச்சமின்றி வெருண்டிருக்க இலக்கை சுற்றிச்சுற்றி வந்தே றூபன் இடித்தான்-பகையால் சுட்டுவிட முடியவில்லை றூபன் மிகவும் வித்தைக்காரன்..!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.