ஆப்கன் விமானத் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் 35 பேர் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானில் சுமார் 35 ஐஎஸ் தீவிரவாதிகள் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் முகம்மது ஹணீப் ரேசாய் சின்குவா செய்தி நிறுவனத்திடம் கூறியது:

ஆப்கனின் வடக்கு ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில், 35 ஐஎஸ் தீவிரவாதிகள் விமானத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

குவாஷ் தேபா மற்றும் தார்சப் மாவட்டங்களில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 35 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த 7 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். 13க்கும் அதிகமான தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஐஎஸ் அமைப்பின் சார்பாக எந்த ஒரு கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.
Powered by Blogger.