நாளாந்தம் 8 முதல் 10 பேர் வரை விபத்தில் உயிரிழக்கின்றனர்!


வீதி விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் 8 முதல் 10 பேர் வரை உயிரிழக்கின்றனர். நாளாந்தம் 50 பேர் காயமடைகின்றனர். அதுமாத்திரமின்றி வாகன விபத்துக்களினால் காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாத்திரம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபா செலவுசெய்கிறது. இத்தொகை மொத்த தேசிய வருமானத்தில் 1.5 சதவீதமாகும் என்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளே கூடுதலாக விபத்திற்குள்ளாகின்றன. கடந்த வருடம் ஜனவரி 1ம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இரண்டாயிரத்து 910 விபத்துக்கள் இடம்பெற்றள்ளன. இந்தக் காலப்பகுதிக்குள் 3 ஆயிரத்து 78 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் தொள்ளாயிரத்து 35 பேர் பாதசாரிகளாவர். தொள்ளாயிரத்து 98 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர். அலட்சியமாக வாகனம் ஓட்டுகின்றமையே இவ்வாறான விபத்துக்களுக்குப் பிரதான காரணம் என போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.