இரண்டாவது முறையாக இணையும் சமந்தா!

திருமணத்திற்குப் பிறகு இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கின்றனர் நாக சைதன்யா – சமந்தா இருவரும்.
தெலுங்குப் படங்களில் ஒன்றாக நடித்தபோது நாக சைதன்யா – சமந்தா இருவருக்கும் இடையில் காதல் தோன்றியது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தபிறகு இருவரும் சேர்ந்து நடிப்பதைத் தவிர்த்தனர். ‘ஆட்டோ நகர் சூர்யா’ தான் அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம். ஒருவழியாக இருவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில், ஷிவ நிர்வணா இயக்கும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது. தொடர்ந்து, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா, ஷாலினி பாண்டே நடிக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்திலும் நடிக்கிறார் நாக சைதன்யா.
 
நாகேஸ்வர ராவ் – சாவித்ரி இணைந்து நடித்த படங்களின் பல சுவாரசிய அம்சங்கள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றன. எனவே, நாகேஸ்வர ராவ் கேரக்டரில் நாக சைதன்யா நடிக்கிறார். ஆனால், நாக சைதன்யா – சமந்தா இருவருக்கும் காம்பினேஷன் காட்சிகள் இருக்குமா என்று தெரியவில்லை.
Powered by Blogger.