அலோசியஸின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

மத்தியவங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தமக்கு பிணை வழங்குமாறு தாக்கல் செய்திருந்த மீள் பரிசீலனை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த மனு மீதான விசாரணையை, எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
Powered by Blogger.