பிரபாகரனியம் மற்றும் நந்திக்கடல் கோட்பாடுகள் நந்திக்கடல்' அதை சாதிக்கும்.!

(பரணி கிருஸ்ணரஜனி)
தமிழகத்தில் திமுக வின் '200 ருபா போய்ஸ்' எழுப்பியிருப்பும் விவாதங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தோல்வியுற்ற போராட்டம் என்று விபரிக்கும் போது அதற்கு எதிர் வாதம் வைக்கும் தரப்பும் அதை ஏற்றுக் கொண்டு விவாதிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
அது தோல்வியா? இல்லையா? என்பதை போராடிய தரப்புத்தான் அறிவிக்க வேண்டுமேயொழிய வெளித்தரப்பு கிடையாது.
புலிகள் என்றுமே தம்மை தோல்வி மனநிலைக்குள் உட்புகுத்திக் கொள்ளவில்லை. கடைசி கணம் வரை அவர்கள் வாயிலிருந்து 'தோல்வி' மற்றும் 'சரணடைவு' என்ற வார்த்தை பதங்கள் உதிரவேயில்லை.
அதை கடைசி கணத்திலும் அவர்கள் வாயிலிருந்து புடுங்கிவிட வேண்டும் என்பதில் உலக அரச பயங்கரவாதிகள் பெரும் பிரயத்தனப்பட்டார்கள்.
ஆனால் தலைவர் தெளிவாகவே இருந்தார். வெற்றி - தோல்விகளுக்கு அப்பால் அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றை விட்டுச் செல்வதிலேயே குறியாக இருந்தார்.
போராடும் ஒரு இனத்தின் அகராதியில் தோல்வி என்ற சொல்லாடல் இருக்க முடியாது என்பதே 'நந்திக்கடலின்' அழுத்தமான செய்தி. 'பின்னடைவு' என்றே இதுவரை காலமும் விளித்து வந்த சூழலில் அதையும் நந்திக்கடல் 'பின்நகர்வு' என்றே வரையறை செய்கிறது.
நிலைமை இப்படியிருக்க தோல்வி என்று வரையறுக்கும் உரிமையை யார் யாருக்குத் தந்தது.? நாம் பின்நகர்ந்துள்ளோம். அதுவே உண்மை.
இந்த பின்புலங்களை அறியாமல் தோல்வியடைந்த போராட்டத்தில் இருந்து தத்துவமோ- கோட்பாடோ -முன்மாதிரியோ இருக்கப் போவதில்லை என்ற ஒரு குதர்க்க வாதமும் வைக்கப்படுகிறது.
வரலாற்றை அறியாத தற்குறிகளால்தான் இப்படி சிந்திக்க முடியும்.
ஸ்பார்ற்ராவுக்கும் ஏதன்சுக்கும் இடையில் கி.மு.404 - 431 காலப்பகுதியில் நடந்த போர் பெலோபோனீசியன் போர் (Peloponnesian War) என்று வரலாற்றில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த போரின் தோல்வியிலிருந்தே 'மனித குல வரலாற்றின் சொத்து' என்று இன்றளவும் வர்ணிக்கப்படும் கோட்பாட்டை கிரேக்க ஞானி தூசிடிடேஸ் எமக்கு தந்திருக்கிறார்.
பெலோபோனீசியன் போர் தோல்வியின் பின் உருவாகிய ஒரு கோட்பாடு போல், இன்று முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியினூடாக பிரபாகரனியம் மற்றும் நந்திக்கடல் கோட்பாடுகள் வழியே தலைவர் பிரபாகரன் மனித குல வரலாற்றின் நவீன கோட்பாட்டாளனாக தன்னை நிறுவியுள்ளார்.
வரலாறுகள் தெரியாவிட்டால் மூடிக் கொண்டிருக்க வேண்டும். அரைகுறையாக எதையாவது விழுங்கிவிட்டு வாந்தியெடுக்கக் கூடாது.
தமிழீழம் தன் சொந்த வரலாற்றை தானே எழுதுவது மட்டுமல்ல, ஒவ்வொரு தேசிய இனங்களினதும் வரலாற்றை அவர்களையே எழுதவும் வைக்கும்.
'நந்திக்கடல்' அதை சாதிக்கும்.
Powered by Blogger.