இந்து மக்களுக்கு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் அறிவிப்பு!

இது பற்றி அந்தணர் ஒன்றிய செயலாளர் தெரிவிக்கும்போது இந்துக்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் அண்மைய பல செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மனவேதனைகளையும் சிந்திக்க வேண்டிய தேவைகளை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களை வறுமைகளை காட்டி மதமாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பது வேதனைக்கும் நெருடலுக்கும் விடயமாகும்.
தற்காலிக வறுமைகளை போக்க அவர்களும் மதம் மாறுவது என்பது கவலையளிக்கின்ற செயலாகும்.
சந்தர்ப்பவாதிகளாக பலர் ஆசைகளை காட்டி வறுமையில் உள்ளோரை இன்னும் துன்பியல் நிலைக்கு இட்டுச் செல்கின்றமையை நாம் வெகுவாகக் கண்டிக்கின்றோம்.
இனிமேலும் இந்த நிலைமைகள் தொடராது இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
மதமாறுவது அவரவர் விருப்பாயினும் சந்தர்ப்பத்தையும் வறுமையினையும் பயன்படுத்தி மதமாற்றும் ஈனச்செயல்களை யார் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியது. பலர் இது பற்றி பாராமுகமாக இருப்பது வேதனையளிக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தவரை வரலாற்றுக்காலங்களுக்கு முன்னரே தமிழும் சமயமும் தழைத்தோங்கி கோலோச்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது வரலாற்றினூடாக அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டாகவே வேண்டும்.
எனவே யாராவது வறுமை என்ற ஒன்றை காரணத்தினைக் காட்டி இனி மதம் மாற நினைத்தால் எம்மோடு தொடர்பு கொள்ளவும் உங்களுக்கான வாழ்வாதாரம் முதல் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்து தரப்படும். மனமாற்றத்தை ஏற்படுத்துவதே வழியன்றி மதமாற்றம் தீர்வாகாது.
Powered by Blogger.