போதை­யற்ற கிரா­ம­மாக எழு­து­மட்­டு­வாழ் படித்த மகளிர் குடியேற்றத்திட்டம்!

தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தின் எழு­து­மட்­டு­வாழ் வடக்கு கிராம அலு­வ­லர் பிரி­வில் உள்ள படித்த மக­ளிர் குடி­யேற்­றத்­திட்­டக் கிரா­மம் போதை­யற்ற கிரா­ம­மாகப் பிர­தேச செய­ல­கத்­தி­னால் இனங்­கா­ணப்­பட்டு செயற்­றிட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­தக் கிரா­மத்­தில் வாழும் பெரும்­பா­லான குடும்­பங்­கள் போதைக்கு அடி­மை­யா­காத நிலை காணப்­பட்­ட­தால் கிரா­மத்­தில் முழு­மை­யாக போதைப் பாவ­னையை இல்­லா­மல் செய்து பல்­வேறு செயற்­றிட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு பிர­தே­சத்­தின் முன்­னோ­டிக் கிரா­ம­மாக மாற்­றப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.
இது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் எ ழுது­மட்­டு­வாழ் வடக்கு கிராம பிரிவு அலு­வ­ல­கத்­தில் பிர­தேச செய­லர் தேவந்­தினி பாபு தலை­மை­யில் அண்­மை­யில் நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் பொது சுகா­தா­ரப் பரி­சோ­த­கர் கிராம மட்ட பொது அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் பிர­ தேச செய­லக அலு­வ­லர்­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.
Powered by Blogger.