மத்திய வங்கி மீண்டும் நிதி அமைச்சிடம்!

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஊடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த அதிவிஷேட வர்த்தமானி இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மீண்டும் நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியின் மேற்படி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.