ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள அனைத்து எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகவேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், மருத்துவ தேவைகளுக்காக செல்வோர் முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பிரதமர் உட்பட ஐ.தே.கவிலுள்ள மூத்த அமைச்சர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீது எதிர்வரும் 4ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது.
கூட்டரசிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் இறுதி நேரத்தில் காலைவாரும் வகையில் செயற்பட்டால் அதை முறியடிக்கும் முகமாகவே ஐ.தே.கவால் இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.