மாணிக்கங்களுடன் சீனர் கைது!

சீன பிரஜை ஒருவர் பெறுமதி மிக்க மாணிக்க கற்களுடன், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (25) நள்ளிரவு அளவில் சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து CX611 எனும் விமானத்தின் மூலம், இலங்கை வந்த 39 வயதான சீன பிரஜை ஒருவரிடமிருந்து, சுங்க அதிகாரிகளால், ரூபா 2 கோடி 10 இலட்சம் (ரூ. 21,131,227) பெறுமதியான மாணிக்கக் கற்கள் மீட்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட, 68.87 கரட் நிறை கொண்ட 12 மாறாக கற்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள பணிப்பாளர் ஒ.எம். ஜபீர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
Powered by Blogger.