ரஷ்ய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

ரஷ்யாவின் தற்போதைய அதிபரான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (18-ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட எட்டு பேர் போட்டியிடுகின்றனர். விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இது தவிர செர்கி பாபுரின் (ரஷ்ய அனைத்து மக்கள் யூனியன்), பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி), விளாடிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி), கெசனியா சோப்சாக், மேக்சிம் சுரேகின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்), போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி), கிரிகோரி யாவ்லின்ஸ்கி (யப்லோகோ) ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
இத்தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் சுமார் 25 ஆயிரம் ரஷ்யர்கள் ஓட்டளிக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ரஷ்யர்கள் ஓட்டளிக்க வசதியாக வாக்குச் சீட்டுக்கள் வந்துள்ளன என்று சென்னையில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரி தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் புதின் எதிர்கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து எளிதில் வெற்றி பெறுவார் என ரஷ்யாவில் தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.