தங்க நகைகளை மறைத்து எடுத்து வந்தவர் கைது!

ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை மறைத்து எடுத்து வந்த நபர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளர்.

2 கிலோ 366 கிராம் தங்க நகைகளுடன் சிங்கப்பூரில் இருந்து வந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். 

இ.கே 349 விமானத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு வந்திறங்கிய குறித்த நபரின் பயணப்பொதியில் இருந்தே இத்தங்க நகைகள் மீட்கப்பட்டன. சந்தேகநபர் மட்டக்களப்பு நகரை சேர்ந்தவரென்றும் சுமார் 35 வயது மதிக்கத் தக்கவர் எனவும் அவ்வதிகாரி கூறினார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவின் அதிகாரிகளே சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட மேற்படி நபரை கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர் சுங்க அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Powered by Blogger.