நுண் கடன்களிலிருந்து வடக்கு மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

நுண் கடன்களிலிருந்து வடக்கு மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பரீசீலிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட அவர், வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றங்களை சேர்ந்தவர்களுடன் நேற்று பிற்பகல் கலந்துரையாடினார்.

 இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார் என வட மாகாண சபை உறுப்பினரும், யாழ்ப்பாண வணிகர் கழக உப தலைவருமான இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.


Powered by Blogger.