கண்டாவளைப் பிரதேச செயலாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்!

(பி. பொன்ராசா)
கண்டாவளை பிரதேச செயலாளர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் (வயது-58) இன்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். பிரதேச செயலகத்தில் பணிகளை நிறைவுசெய்துவிட்டு புளியம்பொக்கணையில் உள்ள அரச வதிவிடத்திற்குச் சென்றபின்னர்
அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனால் அவரது சாரதி உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்கு அவரைக் கொண்டுசென்றார். அங்கிருந்து அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.
எனினும், அவர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். முன்னர் கரைச்சிப் பிரதேச செயலாளராகப் பணியாற்றியபோது , அவரது செயற்பாட்டால் அப்பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மக்களின் மனங்களைக் கவர்ந்திருந்தார். அதேபோன்று மிகக் குறுகிய காலம் கண்டாவளைப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய போதிலும், இப்பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மத்தியிலும் அதிக மதிப்பிற்குரியவராகத் திகழ்ந்தார். அர்ப்பணிப்பான சேவையால் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற பிரதேச செயலாளர் நாகேஸ்வரனின் இழப்பால் அவர்கள் ஆழ்ந்த துயரடைந்துள்ளனர். அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Powered by Blogger.