இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!


இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவில் 6.4 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் எவையும் வெளியாகவில்லை. இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி பகுதியில் கடலை அண்மித்த வடமேற்கே சுமார் 222 கிலோமீற்றர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிலநடுக்கம் காரணமாக பொது மக்கள் கடும் அச்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.