தொற்றா நோய் மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெறவிக்கின்றது!

 தொற்றா நோய் சம்பந்தமான முதலாவது சார்க் நாடுகளின் மாநாடு சுகாதாரம், போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் எதிர்வரும் 31 மற்றும் ஏப்ரல் 1ம் திகதிகளில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெறவிக்கின்றது. 

தொற்றா நோயை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள், கொள்கைகளை நடைமுறைப்படுத்தல், சார்க் நாடுகளின் அனுபவ கலந்துரையாடல்கள் என்பன இதில் இடம்பெறவிருக்கின்றன. 

மரபணு , உடல் அமைப்பு மற்றும் சூழல் பழக்கம் போன்ற காரணங்களினால் உருவாகும் தொற்றா நோய்களை இல்லாதொழிப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 
Powered by Blogger.