விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட தமிழக விவசாயிகள்!

2015-16ம் ஆண்டில் நாட்டிலேயே அதிக உணவு தானிய உற்பத்திய செய்து சாதனை படைத்ததற்காக, தமிழக அரசுக்கு கிரிஷி கர்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற கிரிஷி உன்னதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விருதினை வழங்கினார்.

ஒரு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரூ.5 கோடி நிதி ஆகியவை அடங்கியது இந்த விருது. கடந்த 2015-16ம் ஆண்டில் பயிர்கள் மட்டும் அல்லாமல், பருப்பு மற்றும் வரகு போன்ற சிறுதானிய விளைச்சலிலும் தமிழகம் சாதனை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி வழங்கிய கிரிஷி கர்மான் விருதை தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு பெற்றுக்கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் தனித்தனியாக கௌரவிக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராசாத்தி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சாமிநாதன் ஆகியோருக்கு பிஷாஷ்தி பத்திரத்துடன் ரூ.2 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது.

ஒரு ஹெக்டேருக்கு 9,563 கிலோ உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்ததற்காக இந்த 2 விவசாயிகளுக்கும் விருது வழங்கப்பட்டது. 
Powered by Blogger.