பதவிகளை தூக்கியெறியவும் தயார்!

கட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறியவும் தயார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமான நிகழ்வு கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று இடம்பெற்றது. அந்த நிகழ்வில் வைத்தே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். கட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்‌ற முடிவுகளை எடுப்பதற்கும் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை. தனித்துவத்துடன் பயணிக்கவேண்டிய பாதை குறித்து தயக்கமில்லால் முடிவெடுக்கின்ற காலத்தில் தாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.