ஹெரோயின் வில்லைகளுடன் நேபாள் நாட்டை சேர்ந்தவர் கைது!

ஹெரோயின் வில்லைகளை சூட்சமமான முறையில் வயிற்றில் விழுங்கிக் கொண்டு வந்த நேபாள் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (30) காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே குறித்த நபர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நேபாளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கும் பின்னர் டுபாய்க்கும் பயணித்த பின்னரே இலங்கையை வந்தடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட நேபாள் நாட்டை சேர்ந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8 ஹெரோயின் வில்லைகள் அவரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.