இலங்கையின் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள்!

சர்வதேச ரீதியில் எற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமையை பாதுகாக்கும் சட்டவாட்சியை உரிய முறையில் செயல் திறன்மிக்கதாக முன்னெடுக்கும் நாடு என்ற ரீதியில் இலங்கையின் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன. 

பாதாள உலக குழுவுடன் சம்பந்தப்பட்ட நபர்களினால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடப்பட்ட சில குற்றச்செயல்கள் காரணமாக இந்தப்பிரதேசத்தில் நிலவிய அமைதி நிலைக்கு ஏதோ ஒருவகையில் அழுத்தம் ஏற்பட்டிருந்த போதிலும் ஊடகத்தின் மூலம் குறிப்பிட்டவகையில் நீதி நிருவாகம் சீர்குழையவில்லை, என்பதுடன் பொதுமக்கள் அமைதியாகவும் புத்திசாலித்தனமாக செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். 

இது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் இடம்பெற்றுவரும் இவ்வாறான திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே தந்திரோபாய நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இதுதொடர்பாக விசேட கவனம் செலுத்தியுள்ளனர். 

விசேடமாக குழு ஒன்றின் மூலம் குற்றச்செயல்களை இல்லாதொழிப்பதற்கும் சட்டம் மற்றும் அமைதியை நிலைநிறுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதற்கமைவாக பொலிஸ் புலனாய்வு பிரிவு மிகவும் காத்திரமான செயற்பாடுகள் மூலம் முழுமையாக பாதாள குழுக்களை முற்றாக ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதற்கமைவாக குற்றச்செயல்கள் பெருமளவில் இடம்பெறும் கொழும்பு மற்றும் அதன் அண்டிய பிரதேசங்களில் பொலிஸர் மூலம் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவு பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இரவு பகலாக விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேல் மாகாணத்தில் 10 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சிவில் உடை போன்றே சிவில் கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பொன்றோர் பெரும் எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவையான சந்தர்ப்பங்களில் உடனடி பொலிஸ் வீதித் தடைகளை ஏற்படுத்தி பரிசோதனை நடத்தப்படுகிறது. 

இந்த நடவடிக்கையின் மூலம் பாதாள குழுக்களுடன் தொடர்புபட்ட சிலர் கடந்த சில தினங்களில் ஆயுதங்களுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்துகொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறப்படும் நாட்டின் செயல்படும் பாதாள உலக அங்கத்தவர்கள், உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுளதுடன், நாட்டில் உள்ள பாதாள குழு உறுப்பினர்களை கைதுசெய்வதற்கும் வெளிநாட்டில் உள்ள பாதாள குழுக்களின் தலைவர்களையும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கும் தேவையான ஆரம்ப விசாரணை நடவடிக்கைகள் பொலிஸாரினால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்த மோதல் பாதாள குழுக்களுக்கு மேலதிகமாக பாதாள குழுக்களினால் கையாளப்படும் போதைப்பொருள் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. விசேடமாக போதைப் பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்காக விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு அதற்கு தேவையான நடவடிக்கைகள் மூலம் பல்வேறு மருந்து வகைகளை விற்பனை செய்யும் போர்வையில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் செயற்பாடுகளை தடுப்பதற்கும் போதை பொருனைள முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளது.
Powered by Blogger.