விஷ வாயு கசிந்து இருவர் பலி!

தம்புள்ளை  மனம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் விஷ வாயு கசிந்ததால் அங்கு பணிபுரிந்த பெண்ணொருவரும், ஆணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

 நேற்று இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் 19 வயதான இளைஞனும், 30 வயதான பெண்ணும் என தெரியவந்துள்ளது.

 மனம்பிட்டிய பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட மசாலா பொருட்கள் பொதியிடப்படும் தொழிற்சாலையொன்றிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

 இதற்கு முன்னரும் இதுபோன்ற ஒரு அனர்த்தத்தில் நபரொருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.