கொள்கையின்றி அரசாங்கம் இன்று பயணிக்கிறது!

தான் முன்வைத்துள்ள கொள்கைத் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, விருப்பு வாக்களிப்பேன்  என நாடாளுமன்ற உறுப்பினரான அதுரலிய ரதன தேரர் தெரிவித்தார்.
“தனது ​யோசனைகளுக்கு பிரதமர் முன்னர் ஆதரவு தெரிவித்தார். இருப்பினும் இப்போது அவ்வாறு ​ஆதரவு தெரிவிப்பதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தேசிய சொத்துகளை நாம் விற்பனைச் செய்யாத,மின உரிமைகள் என்ற போர்வையில் இராணுவத்தினரை வேட்டையாடாமல், வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு அடிபணிந்து உள்நாட்டு வர்த்தகர்களை விற்பனை செய்யாது வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் மூலம் கோரியிருந்தேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“எனது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்குமென என்னால் கருதமுடியவில்லை. கொள்கையின்றி அரசாங்கம் இன்று பயணிக்கிறது. இதனை எண்ணி கவலையடைகிறேன்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.