அலங்கார பந்தல்கள் மற்றும் தான சாலைகள் தடை செய்யப்படவில்லை!

விசாகப் பூரணை மற்றும் பொஷன் பூரணை தினங்களில் அலங்கார பந்தல்கள் மற்றும் தான சாலைகளை நடத்துவதைத் தடை செய்ய எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 குறித்த விடயம் தொடர்பில் சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து நேற்று விடுத்த அறிக்கை ஒன்றின் ஊடாக அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

 தாம் விரும்பியவாறு அலங்கார பந்தல்களை அமைக்கவும், தான சாலைகளை நடத்தவும் எந்தவொரு பிரஜைக்கோ அல்லது பிரஜைகள் குழுவினருக்கோ தடை இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Powered by Blogger.