டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

தொழிலாளி ஒருவரை வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாக அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று 30.03.2018 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த மாதம் 20 ம் திகதி அன்று கங்கானி ஒருவரை தவராக பேசியதாக தெரிவித்து தோட்ட தொழிலாளரான எம். மூர்த்தி என்பவருக்கு தோட்ட அதிகாரியால் வேலை நிறுத்தம் வழங்கப்பட்டது. 

அதன் பின் இதுவரை குறித்த நபருக்கு தோட்ட அதிகாரியால் தொழில் வழங்கப்படாததால் உடனடியாக தொழில் வழங்கப்பட வேண்டும் என கோரி ஆரப்பாட்டத்தை முன்னெடுத்ததாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

தோட்ட தேயிலைக் கொழுந்து மடுவத்துக்கு முன்னால் இன்று காலை 09 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

குறித்த தொழிலாளி தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்துக்கு முன்னால் இன்று காலை தனது வாய் பேச முடியாத 09 வயது ஆண் பிள்ளைக்கும் தனக்கும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தற்கொலை செய்ய முயற்சித்த போது பொதுமக்கள் இருவரையும் காப்பாற்றியுள்ளனர். 
Powered by Blogger.