நாமலுக்கு அமெரிக்க செல்ல அனுமதி மறுப்பு!

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரை நோக்கி பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அமெரிக்க அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய எமிரேட்ஸ் விமான சேவையூடாக அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை மறுப்பதாக எமிரேட்ஸ் விமான சேவை நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரியான விளக்கம் எதுவும் வழங்கப்படாமல் தான் அமெரிக்கா செல்வது தடுக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தன்னிடம் செல்லுபடியான விசா இருந்தும் அமெரிக்கா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் விளக்கமளிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த ரஷ்யா ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ சுயாதீன கண்காணிப்பாளராக பணியாற்றியிருந்ததாகவும் சில உத்தியோகபூர்வ கூட்டங்களில் அவர் பங்கேற்றிருந்ததாகவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
Powered by Blogger.