06 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டது!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

   ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 06 அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த பிரேரணையில் ஐக்கிய தேசிய கட்சியின் 20 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 
  ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியின் அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.