20 ஆம் திருத்தம் குறித்து உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது தொடர்பில், மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரவுள்ள 20 ஆம் திருத்தம் குறித்து தேவையான சந்தர்ப்பத்தில் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஒன்றிணைந்த எதிரணி இந்த வலியுத்தலை விடுத்துள்ளது.

 கொழும்கில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது ஒருபோதும் சரியானதாக அமையாது எனத் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.  தேசிய சுதந்திர முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், நாடாளுமன்றத்தைக் கலைத்தால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அதற்கு ஆதரவளிக்க இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவ்வாறான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டால், தேசிய சுதந்திர முன்னணி அதனை எதிர்க்கும், என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.