ரணில் நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டார்!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 

வாக்களிப்புகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் பெறப்பட்டுள்ளது. 

இந்த வாக்களிப்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, சரத் அமுனுகம, நிமல் சிறிபால டி சில்வா, பைஸர் முஸ்தபா, மஹிந்த சமரசிங்க, விஜேமுனி சொய்சா, லக்ஸ்மன் செனவிரத்ன, ஏ.எச்.எம் பௌசி, லசந்த அலகியவன்ன, நிஷாந்த முத்துஹெட்டிகம, மனுஷ நாணயக்கார, தொண்டமான், அத்துரலிய ரத்ண தேரர் உட்பட 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. 

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ மற்றும் ஈபிடீபி தலைவர் டக்லஸ் தேவானந்த ஆகியயோர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 

இதனையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்புகள் இரவு 9.30 மணிக்கு ஆரம்பிக்கபட்ட தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலேயே நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.