எதிர்க்கட்சியில் தேசிய அரசியல் வாதிகள் இணைவது உறுதி!

தேசிய அரசாங்கம் மீது அதிருப்தி வெளியிட்டு அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது, குறித்த 16 பேரும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வர் எனக் கூறப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக குறித்த 16 பேரும் வாக்களித்திருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த 16 பேரும் தங்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.