தவறான அரசியல் முறைமையே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு காரணம்!

மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு காரணம் பல வருடங்களாக இடம்பெறும் தவறான அரசியல் முறைமையே என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.

 அதன் செயலாளர் குமார் குணரத்னம் பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

 தற்போது நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.  மத்திய வங்கியில் இடம்பெற்ற முறி மோசடி மற்றும் பிரதமர் மீது நம்பிக்கை இன்மை என்பனவும் முன்வைக்கப்படுகின்றன.

இது மக்களுக்கு பாதிப்பாக இருந்தாலும், பிரதான காரணம் பலவருடங்களுக்கு முன்பிருந்து இடம்பெற்றுவரும் தவறான அரசியல் கலாச்சாரமே என குமார் குணரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.