இன்று பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் மைத்திரி உரை!

பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் பிரதான உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நிகழ்த்த உள்ளார்.

 'பொதுவான எதிர்காலத்தை நோக்கி' என்ற தொனிப்பொருளில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் மாநாடு, எதிர்வரும் 21 ஆம் திகதிவரை இடம்பெற உள்ளது.

 இந்த மாநாட்டில் சுபீட்சம், பாதுகாப்பு, நியாயம், பேண்தகுதன்மை ஆகிய அம்சங்களின் கீழ் பொதுநலவாய நாடுகளின் நோக்கங்ளை அடைந்துகொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இறுதியாக மோல்டா நாட்டில் நடைபெற்றது. தற்போது இந்த அமைப்புக்கு தலைமை வகிக்கும் மோல்டா இந்த மாநாட்டின்போது, அதன் தலைமைத்துவத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு வழங்கவுள்ளது.

 இந்த நிலையில், நாளைய தினம் இடம்பெற உள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்க உள்ளார்.

 அத்துடன், பிரித்தானிய மகாராணியின் 92ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் விசேட நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ள உள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.