வியட்னாம் செல்லவுள்ள மாணவர்களுக்கு பணப்பரிசில்கள்!

19ஆவது ஆசிய பௌதீகவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வியட்னாம் செல்லவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் எட்டு மாணவர்களுக்கு 10 இலட்சம் ரூபா பணமும் பரிசில்களும் வழங்கப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை வியட்னாமில் நடைபெறவுள்ள ஆசிய பௌதீகவியல் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு மாத்தறை சுஜாத்தா வித்தியாலயம், எஹெலியகொட மத்திய மகா வித்தியாலயம், காலி ரிச்மண்ட் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி, கல்கிஸ்ஸ சென் தோமஸ் கல்லூரி, குருநாகல் மலியதேவ கல்லூரி ஆகிய கல்லூரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி எட்டு மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
Powered by Blogger.