தானா சேர்ந்த கூட்டம் படைத்த புதிய சாதனை!

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் சூர்யா நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும் கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இதில் இடம் பெற்ற ‘சொடக்கு மேல…’ பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது.
இந்தப் பாடலின் வரிகள் வீடியோ யூடியூப்பில் வெளியானது. தற்போது அதிக பார்வையாளர்கள் பார்த்த லிரீக் வீடியோவாக சாதனை படைத்திருக்கிறது.
இதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்து, எல்லாப் புகழும் சூர்யா, அனிருத்துக்கே என்றும் பாடல் பாடிய அந்தோனி தாசன், மணி அமுதவன் மற்றும் தயாரிப்பாளர், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
Powered by Blogger.