நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றாவிட்டால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன்!

நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றாவிட்டால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சினிமாத்துறையினர் கண்டன அறவழிப் போராட்டம் நடத்தினர். வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், முக்கியமான சிலரும் கலந்து கொள்ளவில்லை.
 
‘ஏன் நீங்கள் கலந்து கொள்ளவில்லை?’ என இயக்குநர் பாரதிராஜாவிடம் கேட்டபோது, “ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலத்தின் பெயரில் தனித்தனியாக நடிகர் சங்கம் இருக்கிறது. ஆனால், இங்கு மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கிறது. அதை மாற்றும்வரை, அந்த சங்கம் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன்” என்றார்.
Powered by Blogger.