திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல அனுமதி!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது. 

களனிப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கம், அவுஸ்திரேலிவாவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இம்மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா​வுக்கு சென்றுவர அனுமதி வழங்குமாறு திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார். 

இந்த கோரிக்கைக்கு அரச தரப்பால் எதிர்ப்பு தெரிவிக்கப்படாத காரணத்தால் அந்தக் காலத்தில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அவரின் கடவுச்சீட்டை விடுவிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் வௌிநாட்டில் இருந்த வந்த பின்னர் மே மாதம் 07ம் திகதிக்கு முன்னர் கடவுச்சீட்டை மீண்டும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த ஜனாதிபதி காலத்தில் தவறான ஆவணம் ஒன்றை தயாரித்து, அதனை ஊடகங்களுக்கு வௌியிட்டமை தொடர்பில், திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.