புதிய தேசிய வருமான வரி சட்டம் இன்று முதல் நடைமுறை!

புதிய தேசிய வருமான வரி சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.  இதன் மூலம் இலங்கையின் வரிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொருளாதார நிவுணர்கள் கூறுகின்றனர்.
 இந்த திருத்தத்தின் மூலம் புதிய வரிமுறைகளும் அறிமுகம் செய்யப்படுகின்ற அதேவேளை, பல துறைகள் சார்ந்த வரிமுறைகளிலம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வரி தொடர்பான ஆவணம் ஒன்று பேணப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்த வரி சட்ட திருத்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டது.   இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தினால வழங்கப்பட்ட உத்தரவொன்றின் அடிப்படையில் மீள் திருத்தங்கள் செய்யப்பட்டு, செப்டெம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 இந்த புதிய வரிகள் தொடர்பான சட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையென முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.