எப்பாவல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் பதவி நீக்கம்!

எப்பாவல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரை பதவி நீக்கம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 

குறித்த விகாரையின் முன்னாள் விகாராதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.