மலையகப் பகுதி வெள்ளத்தில் முழ்கியுள்ளது!

மலையகப் பகுதியில் ஹற்றன், நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, மஸ்கெலியா, தலவாக்கலைப் பகுதிகளில் இன்று பெய்த கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஹற்றன் நகரப்பகுதியில் சில வீதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.
ஹற்றன் கொழும்பு பிரதான வீதியிலும், நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வீதி வழுக்கும் தன்மையாக இருப்பதனாலும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.