சுவிட்சர்லாந்து காவல்த்துறை தலைமையகத்தின் விசேட அறிவிப்பு!

சுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக காவல்த்துறைகள் தேவைப்படுவதாகவும் அதனால் குறைந்தபட்சம் 2000 காவல்த்துறைகள் தேர்வு செய்யப்படவேண்டும் என்றும் காவல்த்துறை மற்றும் நீதித்துறை மாநாட்டிற்கு தலைமையேற்ற Pierre Maudet தெரிவித்துள்ளார்.

இணையதள குற்றங்கள் மற்றும் உலக பொருளாதார மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகள் நடைபெறுவதால் இது மிகவும் அத்தியாவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைக் காட்டிலும் சுவிட்சர்லாந்தில் காவல்த்துறையின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் 277 பேருக்கு ஒரு காவல்த்துறை இருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் 455 பேருக்கு ஒரு காவல்த்துறை உள்ளனர்.

அதாவது காவல்த்துறையின் எண்ணிக்கை 10 சதவிகித்திலிருந்து 15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், இன்னும் 2000 பேர் காவல்த்துறை வேலையில் சேர்க்கப்பட வேண்டும்.

ஒரு தேசிய காவல்த்துறை படை இருக்குமானால், முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அதிலிருந்து தேவைக்கேற்ப காவல்த்துறையை பயன்படுத்திக் கொள்ளலாம் அன்றும் அவர் தெரிவித்தார்.

இணைய குற்றங்கள், தீவிரவாதம் ஆகியவை பெரிய பிரச்சனைகளாக உள்ளதால் சுவிட்சர்லாந்து அவற்றை எதிர்கொள்ளும் அளவில் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா அரசியல்வாதியும் வழக்கறிஞருமான Pierre Maudet (40), பொலிஸ் மற்றும் நீதித்துறை மாநாட்டிற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

No comments

Powered by Blogger.