மத்தளயில் தரையிறங்கியது மிகப்பெரிய விமானம்!

மத்தள விமான நிலையத்தில் உலகின் மிகப் பெரிய விமானம் ஒன்று இன்று காலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

அன்டநோவ் ஏ.என்.-225 மிரியா ( Antanov An-225 Mriya) என்ற உலகின் மிகப்பெரிய விமானமே மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும் விமானக் குழுவினர் ஓய்வெடுத்துக்கொள்வதற்காகவும் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வந்துள்ளதாகவும் அது புறப்படும் நேரம் தற்போதுவரை திட்டமிடப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அன்டனோவ் ஏ.என். 225 மிரியா  என்பது மூலோபாய நோக்கங்களிற்காக பொருட்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட விமானமாகும்.1980 களில் சோவியத்யூனியனின் ஒரு பகுதியாக விளங்கிய உக்ரைனின் அன்டனோவ் வடிவமைப்பு பணியகம் இந்த வகை விமானங்களை உருவாக்கியிருந்தது.ஆறு டேர்போபான்கள் மூலம் இந்த விமானம் இயங்குகின்றது. 640 தொன்பொருட்களுடன் பயணிக்க கூடிய இந்த விமானமே உலகின் அதிக எடைகூடிய விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.