தமிழ் தரப்பு சம்பந்தனை பதவி விலகக் கோரிக்கை!

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து, தமிழ் தேசியக்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விலக வேண்டும் என்ற வலியுறுத்தல் தமிழ் தரப்பில் இருந்து அதிகரித்து வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பதிவில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
“புது அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், சம்பந்தன் இலங்கை பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தல் நலம்.
அப்புறமும் அது தொடர்ந்தால் அது பக்க வாத்திய ஊதல்தான். ஈழத்தை கைவிட்டு ஒரே நாட்டு கொள்கையை சம்பந்தன் ஏற்றது சிங்கள தேசத்துக்கு முக்கியமில்லை போலும்.” என குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தில் இருந்து எதனையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை தொடர்ந்தால், இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இந்த கருத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆமோதித்துள்ளார்.
“இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதே அரசாங்கத்துக்கு மிகப்பெரிய அழுத்தமாக அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.